நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பணிகளும், பரப்புரைகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19 ஆம் தேதி துவங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற்றது. கடலூரில் 35 பேர் 41 மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிலையில் 27 ஆம் தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதில் 23 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சுயேச்சையாக வேட்புமனு தாக்கல் செய்த மதிப்பிரியா மற்றும் பாமக மாற்று வேட்பாளர் தமிழரசி ஆகியோர் தங்களது வேட்பு மனுவினை திரும்பப் பெற்றனர்.
இந்நிலையில் இன்று இறுதி வேட்பாளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரி அன்புச்செல்வன் வெளியிட்டார்.
அதன் பின்னர் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கும் பணி தேர்தல் பொது பார்வையாளர் ஜிபி பாட்டில் முன்னிலையில் நடைபெற்றது.
இதில், சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த கடலூர் பாஜக மாவட்ட பொதுச்செயலாளர் துரை.செந்தாமரை கண்ணனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.