ETV Bharat / state

திமுக கூட்டணியில் காங்கிரஸ் உரிய இடங்களை பெறும் - அழகிரி

கடலூர்: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உரிய இடங்களை பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி தெரிவித்தார்.

கே. எஸ். அழகிரி செய்தியாளர்ச் சந்திப்பு!
கே. எஸ். அழகிரி செய்தியாளர்ச் சந்திப்பு!
author img

By

Published : Jan 23, 2020, 11:21 PM IST

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய மேம்பாடு, மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று காங்கிரஸ் திட்டங்களை விளக்குவார்” எனத் தெரிவித்தார்.

மேலும், “பெரியார் சம்பந்தமான சர்ச்சை பேச்சு மறக்கப்பட வேண்டிய விஷயம் என ரஜினிகாந்த் கூறுகிறார். மறக்கப்பட வேண்டிய ஒரு விஷயத்தை அவர் ஏன் பேசினார் என்ற கேள்வி எழுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் இதழின் அட்டையில் கருப்பு மையில் எழுதி சோ வெளியிட்டிருந்தார். அந்த விழாவில் ரஜினிகாந்த் அதையும் பேசியிருக்கலாம். ரஜினிகாந்த் சொந்தமாக சிந்திக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லி பேசினால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உரிய இடங்களை திமுக கூட்டணியில் பெறும்” என்றார்.

இதையும் படிங்க...எருது விடும் விழா: பைக்கை பரிசாக வென்ற காளைகள்

Intro: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உரிய இடங்களை திமுக கூட்டணியில் பெறும்- கே எஸ் அழகிரி பேட்டி
Body:கடலூர்
ஜனவரி 23,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 123வது பிறந்த நாள் விழா மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற காங்கிரஸ் பிரமுகர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி விவசாய மேம்பாடு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெறவுள்ள பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்று காங்கிரஸ் திட்டங்களை விளக்கி பேசுவார் என கே.எஸ் அழகிரி தெரிவித்தார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கட்டுமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்களால் மணல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கட்டுமான தொழில் இல்லாத நிலையிலும், சிமெண்ட் விலை குறையவில்லை. சிமெண்ட் ஆலை முதலாளிகளும் தமிழக அரசும் சேர்ந்து விலை குறைய விடாமல் பார்த்துக் கொள்வதாக குற்றச்சாட்டினார்.

தனியார் பள்ளிகள், கல்லூரிகளில் பேருந்துகளுக்கு புதிதாக வேகக் கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏற்கனவே இந்த கருவி பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் இந்த புதிய அறிவிப்பு பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்கான நோக்கம் என்ன என்பதை தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

தமிழக அரசில் ஒவ்வொரு துறையும் மோசமான நிலையில் உள்ளது. மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளின் விருப்ப ஓய்வு குறித்து ஊடகங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இது தமிழ்நாடு மட்டுமல்லாது அகில இந்திய அளவில் நடக்கிறது. ஏற்கெனவே 2 ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இதுபோல் பணியிலிருந்து விலகி உள்ளனர். அதிகாரி விருப்ப ஓய்வு கொடுத்த விவகாரம் மாநில அரசுக்கு இழுக்கு.

பெரியார் சம்பந்தமான சர்ச்சை பேச்சு மறக்கப்பட வேண்டிய விஷயம் என ரஜினிகாந்த் கூறுகிறார். மறக்கப்பட வேண்டிய ஒரு விஷயத்தை அவர் ஏன் பேசினார் என்ற கேள்வி எழுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் இதழின் அட்டையில் கருப்பு மையில் எழுதி சோ வெளியிட்டு இருந்தார். அந்த விழாவில் ரஜினிகாந்த் அதையும் பேசியிருக்கலாம். ரஜினிகாந்த் சொந்தமாக சிந்திக்க வேண்டும். மற்றவர்கள் சொல்லி பேசினால் இதுபோன்ற நிலைதான் ஏற்படும்.

தஞ்சை கோயியில் தமிழில் குடமுழுக்கு செய்வது நம் மொழிக்கு பெருமை சேர்க்கும் விஷயம்.

குடியுரிமை சட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என பாஜக ஒற்றைக்காலில் நிற்கிறது. இது சர்வாதிகார ஆட்சி அமைப்பு போல் செயல்படுவதை வெளிப்படுகிறது.

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது என்பது ஏற்க முடியாதது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் உரிய இடங்களை திமுக கூட்டணியில் பெறும். தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான வாய்ப்பு இல்லை. வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என பேட்டி அளித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.