கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜெகனை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், " நெய்வேலி தொகுதியை வளர்ச்சி பெற்ற தொகுதி மாற்ற அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் ஜெகனுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதிமுக கூட்டணி உழைக்கும் கூட்டணி. உழைப்பதற்கு பிறந்தவர்கள் வெயில் என்று பாராமல் பாடுபவர்கள். அதனால்தான் உச்சி வெயிலில் நின்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடுகின்றனர். இதுபோன்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் வெயிலில் நின்று பரப்புரை செய்ய சொல்லுங்கள் பார்ப்போம். திமுக கூட்டணி என்பது சந்தர்ப்பவாத கூட்டணி, ஆனால் அதிமுக கூட்டணி வளர்ச்சிக்கு பாடுபடும் கூட்டணி.
மு.க ஸ்டாலின் பொய் பேசுவதில் கைதேர்ந்தவர். அதில், அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம். திமுக பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டு வாக்கு வாங்கலாம் என்றும் ஆட்சியை பிடிக்கலாம் என்று பகல் கனவு காண்கிறார்கள். ஆனால் நாம் இப்போது தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 6 சிலிண்டர், குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரத்து 500 ரூபாய், வாஷிங் மெஷின் போன்ற மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளோம். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் அதுபோன்று திட்டங்கள் எதுவும் கிடையாது.
ஆகவே, அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து நெய்வேலி சட்டமன்ற தொகுதியை முன்மாதிரியான தொகுதியாக மாற்ற வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: முதலமைச்சர் முதல் எதிர்க்கட்சி தலைவர் வரை பரப்புரை செய்ய தடை கோரி வழக்கு!