ETV Bharat / state

சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம்: தடுத்து நிறுத்திய அலுவலர்கள் - கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர்: விருத்தாசலம் அருகே 16 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

16 வயது சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணம்: தடுத்து நிறுத்திய காவல் துறை!
Police stopped child marriage
author img

By

Published : Aug 30, 2020, 9:50 PM IST

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (26). இவருக்கும் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி பகுதியைச் சேர்ந்த (16) வயது சிறுமிக்கும் இன்று திருமணம் நடைபெறவிருந்தது.

இந்த திருமணம் குறித்து கடலூர் மாவட்ட குழந்தைகள் நல குழு அமைப்புக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில், சமூக நலத்துறை அலுவலர்கள், கருவேப்பிலங்குறிச்சி காவல் துறையினர் அச்சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரணை நடத்தி திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

21 வயது அடைவதற்கு முன்னர் திருமணம் நடத்தக் கூடாது, மீறி நடத்தினால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலர்கள் சிறுமியின் பெற்றோருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்டவர்களை கடலூரில் உள்ள குழந்தைகள் நல அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி கூறியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.