கடலூர்: உலகப்புகழ் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன விழா ஜூலை 6ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தேரோட்டம் ரத்து
இத்திருவிழாவின் ஒரு பகுதியான ஆனி திருமஞ்சன தேரோட்டம் மிகவும் பிரசித்திப் பெற்றது. கரோனா தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு தேர்த் திருவிழாவிற்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்நிலையில் இன்று கோயிலில் நடராஜர், சிவகாமி சுந்தரி சிலைக்குச் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்செய்தனர்.
நடனக்கோலத்தில் காட்சி
தேர்த் திருவிழா நடைபெறாதது தங்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக பக்தர்கள் தெரிவித்தனர். நாளை (ஜூலை 15) ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் அதிகாலை முதல் சுவாமிக்கு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்படும்.
மதியம் 2 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடனமாடிய கோலத்தில் நடராஜரும் சிவகாமசுந்தரியும் காட்சியளிப்பர்.
இதையும் படிங்க: வரும் காலம் பாஜகவின் காலம் - அண்ணாமலை