கடலூர்: சிதம்பரம் விஸ்வநாதன்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் ஜே.முத்துக்குமரன் (40). ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
இவர் தனது 12 வயதிலிருந்து தந்தையுடன் சேர்ந்து கவரிங், தங்க நகைகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தனது அனுபவத்தின் மூலம் ஏதாவது சாதிக்க வேண்டும் என எண்ணியுள்ளார், முத்துக்குமரன்.
சாதிக்கத்துடித்த முத்துக்குமரன்
இதனையடுத்து குறைந்த அளவு தங்கத்தில் பல்வேறு சிறிய நகைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் டிசம்பர் 22ஆம் தேதி 2.790 கிராம் தங்கத்தில் மிகச்சிறிய அளவிலான வேளாங்கண்ணி தேவாலயத்தை செய்து சாதனைப் படைத்துள்ளார்.
இந்த தேவாலயமானது ஒன்றரை இன்ச் நீளம், 1 இன்ச் உயரம் மற்றும் அகலத்தினைக் கொண்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இதனை உருவாக்கியதாகவும் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: Christmas special recipe:'ரோஸ் குக்கீஸ்' தயாரிக்கும் முறை