ETV Bharat / state

சிதம்பரம் தீட்சிதர்கள் குழந்தை திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல்! - child marriage in chidambaram

சிதம்பரம் நடராஜர் கோயிலின் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்து கொண்டதாகக் கருதப்படும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தீட்சிதர்கள் குழந்தை திருமண புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு
தீட்சிதர்கள் குழந்தை திருமண புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பு
author img

By

Published : May 27, 2023, 1:16 PM IST

கடலூர்: உலக புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை தீட்சிதர்கள் நிர்வாகம் செய்து வரும் நிலையில், அவர்களே கோயில் பூஜைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீட்சிதர்களின் குடும்பத்தில் ‘பால்ய விவாகம்’ எனப்படும் குழந்தைத் திருமணம் நடப்பதாக தொடர்ந்து தமிழ்நாடு அரசுக்கு புகார்கள் வந்து கொண்டிருந்துள்ளது.

எனவே, இந்த புகார் தொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் துறையினர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உரிய விசாரணை நடத்தி வழக்குகளைப் பதிவு செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டனர்.

இதனிடையே, குழந்தைத் திருமணம் நடைபெற்றதாக கூறப்படும் சிறுமிகளுக்கு இரு விரல் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், அவ்வாறு செய்தது தவறு எனவும், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீபத்தில் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறி இருந்ததாக செய்தி வெளியானது.

இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து மருத்துவக் குழுவினர் ஏற்கனவே விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் சிதம்பரத்தில் விசாரணை நடத்தியது. சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நேற்றைய முன்தினம் (மே 25) வந்த ஆணையர் ஆர்.ஜி.ஆனந்த், இருவிரல் சோதனை நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை எனவும், அதேநேரம் பிறப்புறுப்பை தொட்டு விசாரணை நடத்தப்பட்டது உண்மை எனவும் தெரிவித்தார்.

ஆனால், நேற்று (மே 26) நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் செய்தி தவறாக வெளியிட்டுள்ளனர் எனவும், சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமண விவகாரத்தில் இருவிரல் பரிசோதனை நடைபெற்றதாக மருத்துவ அறிக்கையில் உள்ளதாகவும், சிறுமியின் கன்னித்திரை சேதம் அடையவில்லை என்பது காவல் துறையினரின் அறிக்கையில் இருப்பதாகவும் மற்றும் இவை அனைத்திற்கும் உண்டான ஆவணங்கள் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் இருப்பதாக ஆணையர் ஆர்.ஜி.ஆனந்த் தெரிவித்தார்.

இந்த நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான குழந்தைத் திருமணம் செய்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னதாக, கோயில் நிர்வாகத்தில் உள்ள தீட்சிதர், அவருடைய 13 வயது மகளுக்கு கடந்த 2021ஆம் ஆண்டில் திருமணம் செய்ததாக சமூக நலத்துறை மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள், சிதம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு வந்த புகார் அளித்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில், மணம் முடித்த மாப்பிள்ளை, மாப்பிள்ளையின் தந்தை மற்றும் தாய் ஆகிய 3 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், சில நாட்களுக்குப் பிறகு தலைமறைவாக இருந்த சிறுமியின் குடும்பத்தார் சிலரையும் காவல் துறையினர் கைது செய்திருந்தனர்.

இதையும் படிங்க: சிதம்பரத்தில் இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மை! ஆளுநர் கூறியது முற்றிலும் உண்மை! NCPCR உறுப்பினர் தகவல்

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.