ETV Bharat / state

Cuddalore Flood: கடலூரில் மத்திய ஆய்வுக் குழு - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்

கடலூரில் வெள்ளத்தால் (Cuddalore Flood) பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

கடலூரில் மத்திய ஆய்வுக் குழு
மத்திய ஆய்வுக் குழு
author img

By

Published : Nov 23, 2021, 4:06 PM IST

கடலூர்: வெள்ளப்பாதிப்பு (Cuddalore Flood) அதிகமாக ஏற்பட்ட பெரிய கங்கனாங்குப்பம், பரங்கிப்பேட்டை அருகே உள்ள பூவாலை கிராமத்தில் மத்திய ஆய்வுக் குழுவினர் ஆய்வு செய்தனர்.

இதில் ராஜீவ் சர்மா, இணைச் செயலாளர் & FA, NATGRID, உள்துறை அமைச்சகம்; விஜய் ராஜ்மோகன், இயக்குநர் (IT), வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறை; ரணஞ்சய் சிங், பிராந்திய அலுவலர், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம்; எம்.வி.என். வரபிரசாத், துணைச் செயலாளர், ஆர்.எச். ஊரக வளர்ச்சி அமைச்சகம் ஆகியோர் தலைமையிலான குழுவினர் ஆய்வை மேற்கொண்டனர்.

மத்திய ஆய்வுக் குழு

கடலூர் அருகே உள்ள கங்கனாகுப்பத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாகப் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள், வீடுகள், பாலங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

இவற்றை கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் விளக்கிக்கூறினார். இதைப் பார்வையிட்ட மத்தியக்குழு தொடர்ந்து அப்பகுதியில் மழை வெள்ளத்தால், இடிந்த இரண்டு வீடுகளைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.

பார்வையிட வந்த மத்தியக்குழுவிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனுவை மாவட்டத் தலைவர் மாதவன் அளித்தார்.

இதையும் படிங்க: Cylinder Blast: சிலிண்டர் வெடித்து விபத்து: பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.