ETV Bharat / state

பட்டியலின ஊராட்சி தலைவருக்கு அவமரியாதை: உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி - பட்டியலின ஊராட்சி மன்ற தலைவருக்கு அவமரியாதை

கடலூர்: ஊராட்சி மன்றத் தலைவரை தரையில் அமரவைத்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி
மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி
author img

By

Published : Oct 10, 2020, 7:27 PM IST

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே தெற்கு திட்டை ஊராட்சியில் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த 100 குடும்பங்களும், 600-க்கும் மேற்பட்ட மாற்று சமூகத்தினரும் உள்ளனர்.

தற்போது நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரி சரவணகுமார் ஊராட்சி மன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆறு உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சியில் ஒருவர் ஆதிதிராவிடர், மீதம் ஐந்து பேர் மாற்று சமூகத்தினர் ஆவர்.

இந்நிலையில், குடியரசு தினம், சுதந்திர தினத்தன்று தேசியக்கொடி ஏற்றக் கூடாது, ஊராட்சி மன்ற கூட்டங்கள் நடைபெறும்போது ஊராட்சி தலைவரும் ஆதிதிராவிட ஊராட்சி உறுப்பினருமான ராஜேஸ்வரி சரவணகுமார் தரையில் அமர வேண்டும் என சாதிய ஆதிக்க மனப்பான்மையில் துணைத்தலைவராக உள்ள மோகன் ராஜன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தின்போது ஊராட்சி மன்றத் தலைவரை கொடியேற்றவிடாமல் ஊராட்சி செயலாளர் சிந்துஜாவும், துணைத்தலைவர் மோகன்ராஜாவும் தடுத்துள்ளனர். இதனிடையே, கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஊராட்சி கூட்டத்தில் ஊராட்சி தலைவர் தரையில் உட்கார்ந்து கொண்டு மற்றவர்கள் நாற்காலியில் அமர்ந்த புகைப்படம் வெளியாகியது.

இது குறித்து ராஜேஸ்வரி கணவரிடம் கேட்டபோது, தங்களது சாதியைக் கூறி தரையில் அமரவைப்பதாகவும், ஊராட்சி மன்றத் தலைவரான தனது மனைவியை கொடியேற்ற விடவில்லை எனவும் தெரிவித்தார். குறிப்பாக துணைத் தலைவர் எப்போது சொல்கிறாரோ அப்போதுதான் ஊராட்சி கூட்டத்தை நடத்த வேண்டும் என மிரட்டியதாகவும் தெரிவிக்கிறார்.

இது குறித்து வெளியே சொல்லக்கூடாது எனவும் துணைத் தலைவர் அச்சுறுத்தியுள்ளார். மற்ற ஊராட்சி உறுப்பினர்கள் ஒரே சமூகம் என்பதால் அவர்களின் மிரட்டல் தொடர்ந்து கொண்டுவருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக தெற்கு திட்டை ஊராட்சி செயலாளர் சிந்துஜாவை இடைநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி உத்தரவிட்டார்.

மேலும் தெற்கு திட்டை ஊராட்சி துணைத் தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி செயலர் சிந்துஜா மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார். சாதி பிரச்னை என்பதால் எவ்வித அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இது தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி தெரிவிக்கும்போது, "இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர், வருவாய்த் துறையினர் வார்டு உறுப்பினர்களிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அவர்களின் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. துணைத் தலைவர், செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார்.

மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமூரி பேசிய காணொலி

ஊராட்சி மன்ற தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என தெரிவித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ், துணைத் தலைவர் மற்றும் துணைச் செயலாளர் மீது எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க:திருவாரூரில் வடிகால் தடுப்பணையை சீரமைக்கக் கோரி விவசாயிகள் கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.