ETV Bharat / state

'நாங்கள் கை காட்டும் கட்சிதான் தமிழ்நாட்டை ஆளும்'- பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்!

கடலூர்: பாஜக பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் கெஞ்சியதில்லை, நாங்கள் கை காட்டும் கட்சிதான் தமிழ்நாட்டை ஆளும் என பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ் தெரிவித்துள்ளார்.

'நாங்கள் கை காட்டும் கட்சிதான் தமிழ்நாட்டை ஆளும்'- பாஜக விவசாயி அணி தலைவர் ஜி.கே.நாகராஜ்!
Cuddalore district bjp Farmer team leader
author img

By

Published : Sep 1, 2020, 10:34 PM IST

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு பாஜக விவசாய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே.நாகராஜ் தலைமையில் அந்த அணியின் கூட்டம், இன்று கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் நடைபெற்றது.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாகராஜ் கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மாடித்தோட்டம் திட்டம் தொடங்கவுள்ளது. நம்மாழ்வார் சொன்ன மரங்களை அடங்கிய மாடித்தோட்டங்கள் அமைக்கப்படும்.

கடலூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் பிரதமர் திட்டங்களில் முறைகேடு அலுவலர்களின் சொத்துக்களை தமிழ்நாடு அரசு பறிமுதல் செய்ய வேண்டும். மத்திய அரசு திட்டங்களை மாநில அரசு செயல்படுத்தும்போது திட்டம் அல்லது பிரதமர் பெயர் சொல்வதில்லை. கட்சி சார்பாக அந்த திட்டங்களை செயல்படுத்துகின்றனர். இந்த நடைமுறையை தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்" என்றார்.

மேலும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக தமிழ்நாடு அரசு சிறப்புச் சட்டம் இயற்றியும், மத்திய அரசு இதுவரை ஒப்புதல் அளிக்காதது குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாகராஜ், வாக்கு வங்கிக்காக எதையும் பாஜக செய்யாது என்றும், முறையாக ஆய்வு செய்த பிறகு ஒப்புதல் அளிக்கும் எனத் தெரிவித்தார்.

விவசாயம் சார்ந்த தமிழ்நாடு அரசின் செயல்பாடு சில இடங்களில் நன்றாக இருப்பதாகவும், சில இடங்களில் அதிமுக தலையீடு, கட்சிக்காரர்களுக்கு முன்னுரிமை இருப்பதாக தெரிவித்தார்.

அவினாசி அத்திக்கடவு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதற்கு பாராட்டு தெரிவித்த அவர், பல நீர் ஆதார திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் பழனிசாமி செய்வார் என நம்பும் அதேவேளையில், நடவடிக்கை எடுக்கும் வரை காத்திக்கொண்டிருக்க மாட்டோம் எனவும் தெரிவித்தார்.

பல்வேறு அணை திட்டங்களுக்கு நிலம் அளித்த மக்கள் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள் என்றும், கூட்டணி வேறு - மக்கள் பிரச்சினைகளில் எங்கள் செயல்பாடு வேறு என்றும் விளக்கம் அளித்தார்.

பாஜக பதவிக்காகவும், அதிகாரத்திற்காகவும் கெஞ்சியதில்லை, நாங்கள் கை காட்டும் கட்சிதான் தமிழ்நாட்டை ஆளும் எனவும், பாஜக-வை கைவிடுபவர்கள் ஆட்சியை கைவிடுவார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.