கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுசத்திரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வேலு (30), அரவிந்தன் (28). இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் கடலூரிலிருந்து தங்களது சொந்த ஊரான புதுச்சத்திரம் நோக்கி புறப்பட்டனர்.
அப்போது, திருசோபுரம் உப்பனாற்று பகுதியில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில், வேலு, அரவிந்தன் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். இவ்விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த புதுச்சத்திரம் காவல் ஆய்வாளர் அமுதா தலைமையிலான காவலர்கள், இருவரின் உடல்களையும் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏரியில் மிதந்த ஆண் சடலம்; காவல் துறையினர் விசாரணை!