கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியை சேர்ந்த ஆயுதப்படை காவலர் செல்வகுமார் கடந்த ஒன்றாம் தேதி கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். விசாரணையில் புவனகிரி பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண் கந்து வட்டி கேட்டு மிரட்டுவதாகத் தெரியவந்தது.
இதையடுத்து, கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காகப் புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், நேற்று (ஜூன்7) அவர் உயிரிழந்தார். இதனையடுத்து, கந்துவட்டி அனிதா நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு காவல் நிலையத்தில் சேத்தியாதோப்பு பகுதியைச் சேர்ந்த மீன் கடை நடத்தி வரும் அஞ்சுதம் என்பவரிடம் 20 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு 50 ஆயிரம் ரூபாய் வட்டி கேட்டதாகப் புகார் செய்துள்ளார்.
இந்தப் புகாரை தொடர்ந்து அனிதா மீது சேத்தியாதோப்பு காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். நேற்று கைது செய்யப்பட்ட அனிதா தற்போது கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.