ETV Bharat / state

'ஒரு பிடி மண்ணைக்கூட என்எல்சி நிறுவனத்திற்கு தர மாட்டோம்'- அன்புமணி ராமதாஸ் - அன்புமணி ராமதாஸ்

ஒரு பிடி மண்ணைக்கூட என்எல்சி நிறுவனத்திற்கு தர மாட்டோம் என அன்புமணி ராமதாஸ் நெய்வேலியில் பேசினார்.

அன்புமணி
author img

By

Published : Mar 27, 2022, 10:33 PM IST

கடலூர் : கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றியம் சிறுவரப்பூரில் என்.எல்.சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் திட்டத்திற்கு மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் பாமக சார்பில் நடைபெற்றது. இதில் பாட்டாளி மக்கள் கட்சி இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு அப்பகுதி மக்களிடம் கருத்துக்களை கேட்டார்.

வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல : பின்னர் அவர் பேசுகையில், “பாமக வளர்ச்சிக்கு எதிரான கட்சி அல்ல. ஆனால், மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது எப்படி வளர்ச்சியாகும். இனிமேல் ஒரு பிடி மண்ணை கூட என்எல்சி நிறுவனம் கைப்பற்ற விட மாட்டோம். என்.எல்.சி வந்தது முதல் இப்பகுதி சீரழிந்து வருகிறது.

1956ஆம் ஆண்டில் என்எல்சி நிறுவனம் தொடங்கப்பட்ட போது 40 கிராமங்களில் 37 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. 40 ஆயிரம் மக்கள் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர். 5 அடியில் தண்ணீர் கிடைத்த பகுதிகளில் தற்போது 800 முதல் ஆயிரம் அடிக்கு கீழே சென்று விட்டது. சில லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்ட என்எல்சியின் தற்போதைய மதிப்பு ரூ.54 ஆயிரம் கோடி மதிப்பாக உள்ளது.

நிகர லாபம் : கடந்தாண்டில் ரூ.11,500 கோடி லாபம் ஈட்டி உள்ளது. நிரந்தர தொழிலாளர்கள் வெளிமாநிலங்களில் இருந்தும், தற்காலிக ஊழியர்கள் மட்டுமே தமிழகத்தில் இருந்தும் நியமிக்கப்படுகின்றனர். விவசாயம் எங்கு பாதிக்கப்பட்டாலும் பாமக போராடும். அந்த வகையில் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க பாடுபட்டது பாமக தான்.

எதிர்கட்சியாக இருந்த போது நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தற்போது அமைச்சரான உடன் காவல்துறை மூலமாக நிலம் கையகப்படுத்த முயற்சித்து வருகிறார். ராணுவமே வந்தாலும் நிலம் கையகப்படுத்த முடியாது. தற்போது சுரங்க விரிவாக்கத்திற்காக 49 கிராமங்களில் 25 ஆயிரம் ஏக்கர் கையகப்படுத்த முயற்சித்து வருகிறது.

8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு : ஏற்கனவே வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியது முதல் எந்த வாக்குறுதியையும் என்எல்சி நிறைவேற்றவில்லை. எனவே, அவர்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. 8 வழிச் சாலையை எதிர்த்த திமுக, இப்போது அதனை ஏற்கிறது. 8 வழிச்சாலையால் 15 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாதிக்கப்படுவதால் பாமக எதிர்க்கிறது.

என்எல்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு மக்களுக்கு நோய் ஏற்படுகிறது. அரசியல், சட்ட ரீதியாக பாமக, என்எல்சியை எதிர்கொள்ளும். முதல்கட்டமாக கோ.க.மணி தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து என்.எல்.சி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவோம். அதில், நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் வாக்குறுதி குறித்து பேசுவோம். நிலம் கையகப்படுத்துதல் வாழ்வாதார, சமுதாய பிரச்னை என்பதால் என்எல்சி தனது முயற்சியை கைவிட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : IPL 2022: சதத்தை தவறவிட்ட டுபிளசிஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.