ETV Bharat / state

கடலூரில் விரைவில் 4,800 அதிநவீன சிசிடிவிகள் பொருத்தம் - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் - etvbharat tamil

Cuddalore DSP: கடலூர் மாவட்டத்தில் 4,800 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

கடலூரில் விரைவில் 4800 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவிகள் பொருத்தம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 12:47 PM IST

கடலூரில் விரைவில் 4800 அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட சிசிடிவிகள் பொருத்தம்

கடலூர்: கடலூர் நகர அரங்கம் அருகே உள்ள 4 முனை சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள காவல் உதவி மையத்தினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் இன்று (அக்.27) திறந்து வைத்தார். கடலூர் நகரில் காலை மற்றும் மாலையில் பள்ளி, கல்லூரிகள் விடுகின்ற நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருவதாக தொடர் புகார் எழுந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த பகுதிகளில் கூடுதலாக காவலர்கள் பணியமர்த்தப்பட்டு, போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று திறக்கப்பட்ட காவல் உதவி மையத்தில் இருந்து கடலூர் நேதாஜி ரோடு, பாரதி சாலை, கடலூர் அரசு மருத்துவமனை சாலை மற்றும் கல்லூரி சாலைகளில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசலை, கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல்கள், விபத்து மற்றும் குற்றச் சம்பவங்களை மையத்தில் இருந்தவாறு கண்காணித்து, புதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் ஒலிபெருக்கி அமைக்கப்பட்டு உள்ளது.

பின், செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் கூறுகையில், “இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதாவது முகம் தெளிவாக தெரியும்படி அதிநவீன கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: ரேஷன் முறைகேடு விவகாரத்தில் மேற்கு வங்க அமைச்சர் ஜோதிப்ரியா மல்லிக் கைது!

இது தவிர போக்குவரத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒலிபெருக்கி வசதியும் உள்ளது. மேலும், கடலூர் மாவட்டம் முழுவதும் 4,800 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவை பெரும்பாலும் முகத்தை அடையாளம் காணாதபடி அமைந்துள்ளது.

அதனால், தற்போது உள்ள தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு கேமராக்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், பண்டிகை காலங்களைக் கருத்தில் கொண்டு வர்த்தக நிறுவனங்கள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், வங்கிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் புதிதாக அமைக்கும் கண்காணிப்பு கேமராக்களை அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கேமராக்களாகப் பயன்படுத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.

மேலும், அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட கண்காணிப்பு கேமராக்களை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். இதன் மூலம் வருங்காலத்தில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.