கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம், ராஜாஜி சாலையில் வசித்து வருபவர் செல்வகுமார். இவர் என்.எல்.சி சுரங்கம் இரண்டில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 12ஆம் தேதி குடும்பத்தோடு சென்னைக்கு சென்று மீண்டும் நேற்று இரவு வீடு திரும்பினார்.
இந்நிலையில் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்க்கும்போது வீட்டின் பின்பக்க கதவை உடைத்து வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிகள், பொருட்கள் சிதறிக் கிடந்ததைகண்டு அதிர்ச்சியடைந்த செல்வகுமார் பீரோவை பார்த்தபோது அதில் இருந்த 30 சவரன் நகை மற்றும் 70 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து செல்வகுமார் நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்ட காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: