மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் பல்வேறு கட்டப் போராட்டங்கள், ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல் தமிழ்நாட்டிலும் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும் கையெழுத்து இயக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒருபகுதியாக, சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினர் தடியடி நடத்தியதைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும் இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கடலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி, கடலூர் காவல் துறையினர், இஸ்லாமிய அமைப்பைச் சேர்ந்த 264 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ள சம்பவம், தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பேருந்தை வேகமாக ஓட்டிய ஓட்டுநர் - தட்டிக் கேட்ட பயணிக்கு அடி