உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.
நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடலூர் மாவட்டம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனிடையே, தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதேபோல், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும், தகுந்த இடைவெளி உள்ளிட்டவை பின்பற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளி மாவட்டம், மாநிலங்களில் இருந்து வருபவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும்.
மருத்துவம் தொடர்பான ஏதேனும் சந்தேகமிருந்தால் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூரில் நேற்று வரை கரோனா தொற்றால் 7 ஆயிரத்து 841 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 242 பேருக்கு தோற்று உறுதியாகி உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 ஆயிரத்து 83 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 2 ஆயிரத்து 497 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சத்தான உணவுகள் வழங்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 5 ஆயிரத்து 233 பேர் கரோனா தொற்றிலிருந்தது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் நேற்று வரை 89 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91ஆக உயர்ந்துள்ளது.