இந்த போட்டியில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு பள்ளிகளில் பயிலும் சுமார் 400 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதேபோல், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 300 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் என சுமார் 700 பேர் போட்டியில் கலந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இப்போட்டியில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், கலைநிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பரிசுகளை வழங்கினார்.
மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு வங்கிக்கடன் மானியமாக நபர் ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாய் வீதம் 48 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.12 லட்சத்துக்கான காசோலையை வாங்கினார். மேலும், 82 மாற்றுத்திறனாளிகளுக்கு டிசம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை மாதந்தோறும் ரூ.1,500 வீதம் ரூ.4,92,200 மதிப்பீட்டில் பராமரிப்பு ஊக்கத்தொகை ஆணையும் என மொத்தம் 165 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.18,68,400 மதிப்பீட்டில் அரசு உதவி நலத்திட்டங்களை வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ கிருபாகரன், சார் ஆட்சியர் சரயு, தனித்துணை ஆட்சியர் பரிமளம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.