வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள நிவர் புயல் காரணமாக கடலூர் துறைமுகத்தில் பத்தாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயலின் காரணமாக மீனவர்கள் தங்கள் படகுகளை பத்திரமாக துறைமுகப் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர்.
அதேபோல், கடற்கரையோரங்களில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புயல் பாதுகாப்பு மையம் மற்றும் பள்ளி கட்டடங்களில் பொதுமக்களை தங்க வைத்துள்ளனர். தொடர்ந்து கடலின் சீற்றம் அதிகளவில் காணப்படுகின்றது. தேவனாம்பட்டினம், தாழங்குடா போன்ற பகுதிகளில் நேற்று நள்ளிரவில் முதல் கடலரிப்பு ஏற்பட்டு கரையைத் தாண்டி கடல் அலை ஊருக்குள் புகும் வண்ணம் இருக்கிறது.