ETV Bharat / state

கோயம்புத்தூரில் அரிவாளால் தாக்கிய இளைஞர்கள்: ஒருவர் கைது - கொலைன் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

கோயம்புத்தூரில் அரிவாளால் தாக்கும் இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் கிடைக்கப் பெற்ற நிலையில், அச்சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

youth attacking with scythes were arrested in coimbatore  youth attacking with scythes  coimbatore news  coimbatore latest news  coimbatore youth attacking with scythes were arrested  crime news  attempt murder  கொலை முயற்சி  கோயம்புத்தூரில் அரிவாளால் தாக்கிய இளைஞர்கள் கைது  கோயம்புத்தூர் செய்திகள்  அரிவாளால் தாக்கி கொலைன் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது  கொலைன் முயற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது  இளைஞர்கள் கைது
இருவர் கைது
author img

By

Published : Jul 10, 2021, 12:29 PM IST

கோயம்புத்தூர்: உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த சூர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த செல்வாவிற்கும் கடந்த ஜூலை 7 ஆம் தேதி, கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் போது மோதல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சூர்யா, தனது அண்ணன் கார்த்தியிடம் கூறியுள்ளார். அப்போது கார்த்தி செல்வாவை கண்டித்துள்ளார். இதனால் செல்வாவிற்கும், கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும்; தகாத வார்த்தைகள் பேசி சண்டையிட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இளைஞர் தாக்குதல்

கோயம்புத்தூரில் அரிவாளால் தாக்கிய இளைஞர்கள்

இந்நிலையில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி, கார்த்தி அவரது நண்பர்களுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருக்கும்போது, செல்வா தன்னுடைய நண்பர்களுடன் வந்து கார்த்தியை அரிவாளால் தாக்கிவிட்டுத் தப்பி சென்றார்.

இதில் கார்த்தியின் கை, கால் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்படவே, அவரது நண்பர்களும் அக்கம்பக்கத்தினரும் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கைது

இது குறித்து வழக்குப்பதிவு செய்து பீளமேடு காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளைக் கொண்டு தலைமறைவானவர்களைத் தேடி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் செல்வா, அரவிந்த், நந்தா, ஜெயா, பிரவீன், குமார், மனோஜ், கெண்டி ஆகியோர் என்று தெரியவந்தது.

இதில் பீளமேடு புதூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் (20) என்ற இளைஞரை நேற்று (ஜூலை 9) இரவு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: பஸ்சில் இடம் பிடிக்கும் தகராறில் டூவீலர் மெக்கானிக் அடித்துக் கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.