கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை திவான்சாபுதூர் மதுரை வீரன் கோயில் வீதியை சேர்ந்தவர் மகேஸ்வரி. இவர் கூலி வேலை செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் இளைஞர் தீனதயாளன் (22) அடிக்கடி குடிபோதையில் வந்து கையில் பட்டாகத்தி வைத்துக் கொண்டு தான் ரவுடி என்று அனைவரையும் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திவான்சாபுதூர் மளிகை கடைக்கு மகேஸ்வரி சென்றுள்ளார். அப்பொழுது அங்கே தீனதயாளன் கையில் ஒரு பட்டாகத்தி வைத்துக் கொண்டு பொது இடத்தில் நின்று கொண்டு தகாத வார்த்தையில் ரவுடித்தனம் செய்து கொண்டு இருந்துள்ளார்.
அப்பொழுது கடையில் நின்று கொண்டிருந்த மகேஸ்வரி தீனதயாளனை பார்த்து ஏன் தம்பி இப்படி கத்தியை வைத்துக் கொண்டு ரவுடித்தனம் செய்து கொண்டிருக்கிறாய் பேசாமல் போ என்று கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த தீனதயாளன் மகேஸ்வரியை தகாத வார்த்தையால் பேசி கன்னத்தில் அறைந்து கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து மகேஸ்வரி ஆனைமலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ரவுடித்தனம் செய்த தீனதயாளனை ஆனைமலைதுணைக் கண்காணிப்பாளர் கீர்த்தி வாசன்உத்தரவின் பேரில் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் தலைைமையில் உதவிஆய்வாளர் கௌதம் மற்றும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பட்டாகத்தியுடன் இளைஞர் பெண்ணை மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இதையும் படிங்க: குழந்தைகளை குறிவைக்கும் தக்காளி காய்ச்சல்... லான்செட் எச்சரிக்கை...