ETV Bharat / state

கோவையில் யானை தாக்கி இளைஞர் பலி: பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை!

author img

By

Published : Jun 22, 2023, 10:45 AM IST

கோவையில் யானை தாக்கி இளைஞர் பலியான சம்பவம் எதிரொலியாக மருதமலை பகுதியில் வனத்துறையினர் மைக் மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

யானைகள் நடமாட்டம் அதிகமானதால் மருதமலை பகுதியில் வனத்துறையினர் மைக் மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை

கோவை: கோவை வனச்சரகம் மருதமலை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஜூன் 20 மாலை 5 மணியளவில் மருதமலை அருகேயுள்ள வனப்பகுதிக்கு குமார் என்பவர் விறகு சேகரிக்க மனைவி மற்றும் மகனுடன் சென்றுள்ளார். விறகு சேகரித்துவிட்டு மூன்று பேரும் வீடு திரும்பிக் கொண்டிருக்கும்போது, மனைவி விறகுடன் முன் சென்றுள்ளார். மனைவியைத் தொடர்ந்து பின்னால் குமார், மகனைத் தூக்கிக் கொண்டு வந்துள்ளார்.

அப்போது திடீரென வனப்பகுதியிலிருந்த வந்த ஒற்றை ஆண் யானை குமாரைப் பின்புறமாக வந்து தாக்கியது. யானை தாக்கியதில் மகன் தூக்கி எறியப்பட்ட நிலையில், குமாரை யானை மிதித்துக் கொன்றுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டது. கண்முன்னால் கணவனை யானை மிதித்துக் கொன்றதைக் கண்டு அலறிய அவரின் மனைவி, காயமடைந்து கீழே கிடந்த மகனைத் தூக்கிக் கொண்டு ஓடி வந்துள்ளார்.

குமாரின் மனைவி அலறிய நிலையில் கண்ட அக்கம்பக்கத்தினர், சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியதுடன் குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து வனத்துறையினர் மருதமலைப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். தற்போது மருதமலை அடிவாரத்தில் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன. இதனால் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே படிக்கட்டுகளில் செல்ல வேண்டும் எனவும், இருசக்கர வாகனங்களில் மலைப் பாதை வழியாக கோயிலுக்கு செல்வோர் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செல்ல வேண்டும் என்றும் அறிவித்து உள்ளது.

மேலும், காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்கு முன்பாகவோ, பின்பாகவோ பக்தர்கள் சென்றால் ஏற்படும் பாதிப்புகளுக்கு கோயில் நிர்வாகம் பொறுப்பு என வனத்துறையினர் இந்து சமய அறநிலைத்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளனர். இதேபோல், பெரியதடாகம் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்வோர் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே மலைப்பாதை வழியாக செல்ல வேண்டும்.

அதற்கு கோயில் நிர்வாகம் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும் என வனத்துறையினர் நோட்டீஸ் அளித்து உள்ளனர். இந்த நிலையில் மருதமலை அடிவாரப் பகுதியிலான ஐஓபி காலனி, கணபதி நகர், கோல்டன் சிட்டி உள்ளிட்டப் பகுதிகளில் ரோந்து வாகனம் மூலம் யானை நடமாட்டம் குறித்த எச்சரிக்கை தகவல்களை ஒலிப் பெருக்கி மூலம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் அவசியம் இன்றி மாலை மற்றும் அதிகாலை நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்றும்; இரவு நேரங்களில் யானைகள் குடியிருப்புப் பகுதிக்குள் வந்தால் அதனை விரட்டவோ, வேடிக்கை பார்க்கவோ முயற்சிக்க வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர். மேலும் விறகு சேகரிக்க வனப்பகுதி ஒட்டிய நிலங்களிலும் வனத்திற்கு உள்ளேயும் செல்லக்கூடாது எனவும் மைக் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கேட்டை உடைத்துக் கொண்டு கோயிலுக்குள் புகுந்த பாகுபலி யானை: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.