கோவையில் "உலக தர தினம்" பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.
இதில் பொது மக்களுக்கு சுத்தமான குடிநீர் அவசியம், கழிவறையை சுத்தமாக வைத்துக் கொள்வது, திறந்தவெளியில் மலம் கழிப்பதைத் தவிர்ப்பது, உணவு அருந்துவதற்கு முன், கழிவறை சென்று வந்த பின் சோப்பின் மூலம் கை கால்களை சுத்தமாக கழுவது குறித்து விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.
மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உணவு அருந்திவிட்டு பொது இடங்களில் குப்பைகள் போடக்கூடாது, மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் தனியாக அதற்கான குப்பைத்தொட்டியில் போடவேண்டும் என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.