பிகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் சம்சுதீன் (26). இவர் கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத் தளத்தில் ஒப்பந்த அடிப்படையில், கட்டட வேலை செய்துவந்தார். இவர் போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்தி பணிக்குச் சேர்ந்ததாக சூலூர் விமானப்படைத் தள உதவி பாதுகாப்பு அலுவலர் ஜஸ்விந்தர் சிங் சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதன்பேரில் சூலூர் காவல் துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சம்சுதீன் தனது அண்ணனின் ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி வேலைக்குச் சேர்ந்தது தெரியவந்தது. இதையடுத்து சம்சுதீனை சூலூர் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:போலி ஆதார் அட்டை மூலம் சட்டவிரோதமாக குடியேறிய ரோகிங்கியாக்கள் கைது!