கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் விஜயகுமார். இவரது மனைவி கார்த்திகா(43). இத்தம்பதியினருக்கு ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது. கார்த்திகா கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இதையடுத்து உடல்நிலை மற்றும் மனநலம் சரியில்லாததால் தனது கணவரை தன்னுடன் இருக்க அனுமதிக்காமல் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். விஜயகுமார் தனது மனைவியை கடந்த 4ஆம் தேதி பார்த்துவிட்டு மருத்துவமனைக்கு சென்று, அங்கேயே தங்கியுள்ளார். பிறகு நேற்று(அக்.08) கார்த்திகாவின் சகோதிரி வாசுமதி செல்போன் மூலம், அவரை பல முறை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். அப்போது கார்த்திகவின் செல்போன் ஸ்விட்ச் ஆப்லேயே இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த வாசுமதி மாலை 7.30 மணியளவில் கார்த்திகாவின் வீட்டுக்கு சென்று பார்த்துள்ளார்.
அப்போது வீட்டின் கதவு உட்புறமாக தாளிடபட்டு இருந்துள்ளது. பிறகு ஜன்னல் வழியாக பார்த்தபோது அறையில் எரிந்த நிலையில் கார்த்திகாவின் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, உடனே இதுகுறித்து ராமநாதபுரம் காவல் நிலையத்தில் கார்த்திகாவின் சகோதிரி தகவல் கொடுத்தார். அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் கார்த்திகாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உடல்நிலை சரியில்லாமல் அவதிபட்டு வந்த நிலையில் அவர் தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தீ விபத்து ஏற்பட்டு மரணமடைந்தாரா? என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஜீவசமாதி அடைந்தாரா சாமியார்? பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு!