ETV Bharat / state

லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உயிரிழப்பு!

author img

By

Published : Oct 19, 2020, 12:25 PM IST

கோயம்புத்தூர்: வால்பாறை அருகே லாரி மோதிய விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் பெண் உயிரிழப்பு
Woman dead in bike accident

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறையிலுள்ள தோணி முடி எஸ்டேட் பகுதியில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருபவர் ராமானுஜம். இவரும், இவரது மனைவி விமலாவும் நேற்று (அக்.19) மதியம் 1 மணியளவில் இருசக்கர வாகனத்தில், வால்பாறையிலுள்ள அடகு கடைக்குச் சென்றுள்ளனர்.

அங்கு, நகை அடகுவைத்துவிட்டு பணத்தை பெற்றுக்கொண்ட தம்பதி, வீடு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது, நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த ராமானுஜத்தை அருகே இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விமலா உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.