கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் மக்கள் குடியிருப்புப் பகுதிகள், நியாவிலைக் கடைகளில் நுழைந்தது அட்டகாசம் செய்துவருகின்றன.
இந்நிலையில் இன்று (நவம்பர் 10) அதிகாலையில், வால்பாறை அருகே உள்ள தாய்முடி, எம்.டி. பகுதியில் புகுந்த பத்துக்கும் மேற்பட்ட யானைக் கூட்டம் அப்பகுதியிலுள்ள நியாவிலைக் கடைகளை முற்றுகையிட்டது.
கடையிலிருந்த மண்ணெண்ணெய் பேரல்களை வெளியே தள்ளி ரேஷன் அரிசி மூட்டைகளைத் தின்றது. யானைகளின் சத்தம் கேட்டு அங்குவந்த அப்பகுதி மக்கள் வனத் துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலையடுத்து அங்குவந்த மானாம்பள்ளி வனச்சரக வனத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பின்பு அங்கிருந்து யானைகளை விரட்டினர்.