ETV Bharat / state

ரோந்துக்குச் சென்ற வனத் துறையினரை விரட்டிய யானைக் கூட்டம் - காட்டு யானை

கோவை: ரோந்துப் பணியில் சென்ற வனத் துறையினர் வாகனத்தை காட்டு யானைக் கூட்டம் துரத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

elephant
author img

By

Published : Jun 25, 2019, 2:19 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் சில தினங்களுக்கு முன்பு யானை ஒன்று தாக்கி இருவர் உயிரிழந்தனர். தற்போது அப்பகுதியில் வனத் துறையினர் 24 மணிநேரமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் இன்று (ஜூன் 25) காலை நவமலைப் பகுதியில் வனத் துறையினர் ரோந்துப் பணி மேற்கொண்டபோது சாலையின் குறுக்கே நின்றுகொண்டிருந்த யானைக்கூட்டம் வனத்துறை வாகனத்தை துரத்த ஆரம்பித்தது. பின் வனத் துறையினர் அபாய ஒலி எழுப்பி யானை கூட்டத்தை விரட்டினர்.

இதனையடுத்து ஆழியார் அணை, குரங்கு அருவி உள்ளிட்ட இடங்களுக்கு சுற்றுலா வரும் பயணிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் வாகனத்தை துரத்திய காட்டு யானை கூட்டம். பொள்ளாச்சி- 25   பொள்ளாச்சி அருகே உள்ள நவமலையில் கடந்த மாதம் மலைவாழ் மக்களை சேர்ந்த ரஞ்சனி, மாகாளி ஆகிய இருவரை காட்டு யானை தாக்கி உயிர்ழந்தார்கள் இதையடுத்து ரேஞ்சர் காசிலிங்கம் தலைமையில் 24 பேர் கொண்ட குழு அமைத்து வனத்துறையினர் இரவு, பகலும் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர், தென் மேற்க்கு பருவமழை தொடங்கி உள்ளதால் ஆழியார் அணை வனபகுதியில் காட்டு யானைகள் முகாம் ஈட்டுள்ளதால், வால்பாறை மெயின் ரோடு, குரங்கு நீர்வீழ்ச்சி, சின்னார் பதி,நவமலை செல்லும் வழிகளில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்புடன் செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். இன்று காலை நவமலை பகுதியில் வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ரோந்து வாகனத்தில் சென்ற போது ரோட்டின் குறுக்கே இருந்த காட்டு யானை கூட்டம் வனத்துறை வாகனத்தை நோக்கி வந்து மிரட்டியது, வனத்துறையினர் அபாய ஒலி எழுப்பி யானை கூட்டத்தை விரட்டினர் மேலும் நேற்று நள்ளிரவு ஆழியார் வனப்பகுதி ஒட்டி உள்ள தனியார் தோட்டத்தில் புகுந்த ஒற்றை யானை வீட்டின் உள்ள இருந்த தவிடு, அரிசியை சாப்பிட்டு சென்று உள்ளது , தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானைகள் நடமாட்டத்தை கண்காணித்து வருவதாக தெரிவித்தனர். (செய்தி வீடியோ Ft Pயில் உள்ளது)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.