கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனசரகத்திற்குள்பட்ட சுண்டபட்டி விளா மரத்தூர் பகுதியில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு ஆண் காட்டு யானை காலில் காயத்துடன் தடுமாறி நடந்து வந்து ஆற்றில் தண்ணீர் குடிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வனத்துறைக்கு தெரிவித்தனர்.
இதனையடுத்து காலில் காயமடைந்த ஆண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவரின் அறிவுரைப்படி யானை வரும் பாதைகளில் பழங்கள், உணவுப் பொருள்களில் மாத்திரை மருந்துகளை வைத்து சிகிச்சை அளித்தனர்.
சில நாள்களில் வனப்பகுதிக்குள் சென்ற அந்த ஆண் யானை, தற்போது கல்லாறு அருகே செங்கல் படுகு பீட் பகுதியில் அந்த ஆண் யானை இருப்பதாக வந்த தகவல்களை அடுத்து, கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் வனத்துறை மருத்துவர் சுகுமார், வனசரகர் செல்வராஜ் தலைமையில் யானைக்கு சிகிச்சை அளிக்க தர்பூசணி மற்றும் பலாப்பழத்தில் மருந்துகள் வைத்து கொடுத்தனர். இதை சாப்பிட்ட யானை அப்பகுதியிலேயே உள்ளது. இதனையடுத்து யானைக்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை அளித்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மாடு வயிற்றில் இருந்த கேன்சர் கட்டி அகற்றம் - கால்நடை மருத்துவருக்கு குவியும் பாராட்டு!