ETV Bharat / state

வீட்டுக்குள் புகுந்து காட்டு யானை அட்டூழியம்.. மாட்டு கொட்டகையை சூறையாடிய வீடியோ.. பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்! - சத்வா அவென்யூ

கோவை காருண்யா நகரில் உள்ள ஜெய்குமார் என்பவரது வீட்டின் கேட்டை உடைத்து உள்ளே வந்து மாடுகளுக்கு வைக்கப்பட்டு இருந்த தீவனங்களை தின்று விட்டு சென்ற காட்டு யானையின் சிசிடி காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 15, 2023, 11:07 PM IST

Updated : Aug 16, 2023, 12:22 PM IST

வீட்டுக்குள் புகுந்து அட்டூளியம் செய்யும் காட்டு யானை

கோயம்புத்தூர்: வடவள்ளி அடுத்த தடாகம் மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், மருதமலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அண்மையில் அதிகரித்த வண்ணமாக உள்ளது. அண்மை காலங்களாக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் ஊருக்குள் புகும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.

ஊருக்குள் புகும் காட்டு யானைகள் அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி விட்டு செல்கின்றன. சில சமயங்களில் மாடுகளுக்காக வைக்கப்பட்டுள்ள தீவனங்களையும் தின்று விட்டு சென்று விடுகின்றன. அதுமட்டுமின்றி வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளில் வைக்கப்பட்டுள்ள பொருட்களையும் தின்று விட்டு, இடத்தை சேதப்படுத்தி விட்டு சென்று விடுகின்றன.

இந்நிலையில் கோவை மாவட்டம் ஆலாந்துறையை அடுத்த காருண்யா நகர் பகுதியில் சத்வா அவென்யூ என்ற பகுதியில் வழக்கறிஞர் ஜெய்குமார் என்பவருக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. வீட்டின் வளாகத்தின் உள்ளேயே மாட்டு கொட்டகையும் உள்ளது. இரவு நேரத்தில் வந்த ஒற்றை காட்டுயானை, கேட்டை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து மாட்டுக்கொட்டகையில் மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தீவனங்களை தின்று உள்ளது.

இதையும் படிங்க: Independence Day 2023: சுதந்திர தின விழாவைக் கொண்டாடிய கோயில் யானை..!

யானை வந்ததால் தெரு நாய்கள் குலைக்கும் சத்தம் கேட்டும், யானை கேட்டை உடைக்கும் சத்தம் கேட்டும் வீட்டில் இருந்து வெளியில் வந்த ஜெய்க்குமார் டார்ச் அடித்து பார்த்துள்ளார். அப்போது ஒற்றை காட்டு யானை மாட்டுக்கொட்டகையில் இருந்த பொருட்களை தின்று கொண்டிருந்துள்ளது.

பின்னர் இவர் டார்ச் லைட் அடிக்கவே அங்கிருந்த மற்றொரு கேட்டை உடைத்து கொண்டு வெளியேறியது. ஒற்றை காட்டுயானையை பார்த்த ஜெய்க்குமார் அதிர்ச்சிடைந்துள்ளர். இச்சம்பவம் ஜெயக்குமார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானது. தற்போது அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் அப்பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் நடமாடுவது வழக்கமாக இருந்துள்ளது. இந்நிலையில் தற்போது வீடுகளுக்கு நுழைவது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டு காட்டுயானைகள், மற்ற வன விலங்குகள் ஊருக்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Independence Day : சிதம்பரம் நடராஜர் கோயில் 142 அடி உயர கோபுரத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை!

Last Updated : Aug 16, 2023, 12:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.