பொள்ளாச்சி பகுதியில் உள்ள அர்த்தநாரி பாளையத்தில், கடந்த சில மாதங்களாக மக்களை அச்சுறுத்தி வந்த அரிசி ராஜா என்னும் காட்டு யானையை கடந்த வியாழக்கிழமை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட அரிசிராஜா யானை, கலீம் என்னும் கும்கி யானையின் உதவியோடு லாரியில் ஏற்றப்பட்டு, டாப்சிலிப் வரகளியாறு வனப்பகுதியில் உள்ள மரக்கூண்டில் (கரோல்) அடைக்கப்பட்டது.
அரிசி ராஜாவுக்குப் பயிற்சி அளிப்பதற்காக மூன்று யானை பாகன்களும்; மாரியப்பன், ராமு ஆகிய கும்கி யானைகளும் வரகளியாறு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. யானை எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல், அமைதியாக இருப்பதாக, வனத்துறையினரும் தகவல் தெரிவித்துள்ளனர். கால்நடைத்துறை மருத்துவர் சுகுமார் அப்பகுதிக்கு தினமும் சென்று யானையின் நிலை குறித்து அறிந்து வருகிறார்.
அரிசி ராஜா மரக்கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதால், மரக்கூண்டில் ஏற்கெனவே இருந்த சின்ன தம்பி யானை, வெளியே கொண்டு வரப்பட்டு, கால்களில் சங்கலிகள் கட்டபட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனால், வனத்துறையினர் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: '8 பேரைக் கொன்ற அரிசி ராஜா பிடிபட்டது!' - யானைகள் மனிதர்கள் மோதல் எப்போது முடியும்?