ஈரோடு மாவட்டம், காலிங்கராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சேகரன் (51), நாகரத்தினம் (46) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்நிலையில், நேற்று (பிப்.23) காலை ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே சாலை விபத்து ஏற்பட்டதில் சேகரனுக்கு காயம் ஏற்பட்டு அவரை கோவில்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
ஆனால், சிகிச்சை பலனின்றி சேகரன் நேற்று மதியம் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவியிடம் மருத்துவர் தெரிவித்த நிலையில், அதிர்ச்சி அடைந்த நாகரத்தினம் மருத்துவமனையின் 7ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
![தற்கொலை எதற்கும் முடிவல்ல](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10763867_suside.jpg)
இதுகுறித்து, மருத்துவமனை தரப்பில் கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டது. இதையடுத்து, சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். கணவர் இறந்த செய்தியை கேட்ட மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: