கோவை: கோவை கார் வெடி விபத்து தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இந்த கோவை வெடி விபத்து தொடர்பாக தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த வெடி விபத்து விவகாரத்தில் சந்தேகங்கள் நீடிக்கின்றன. காவல் துறை, இனி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோவை மாநகரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக இருக்க அவசியம் என்ன?.
கோவையில் சதி செய்யக்காரணம் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் முடக்கிவிட வேண்டும் என்பதே. வெடிப்பு சம்பவத்தில் ஏன் அவர்கள் கேட்பதற்கு முன்பே என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்தார்கள் என்பது தெரியவில்லை.
இந்த வெடிப்பு சம்பவத்தை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் கண்டிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு இருந்தும் யாரும் கண்டிக்கவில்லை. முதலமைச்சர் ஏன் இந்த சம்பவத்தைக்கண்டிக்கவில்லை.
முதலமைச்சர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும். பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்க வேண்டும். முதலமைச்சரின் மௌனம் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
மக்கள் அச்சத்தோடு வாழ்ந்தால் அது ஜனநாயக நாடு ஆகாது. பயங்கரவாதத்திற்கு எதிராக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். காவல் நிலையங்களை அதிகரித்து என்ன பிரயோஜனம்?. காவல் துறையினரை சுதந்திரமாக செயல்பட வைக்க வேண்டும். கோவையில் தமிழ்நாடு அரசால், பயங்கரவாத எதிர்ப்புக்குழு அமைக்கப்பட வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கோவையில் சம்பவங்கள் நடக்கக்காரணம் என்ன என்பது குறித்து கமிஷன் அமைக்கவேண்டும். மாநில சுயாட்சி பேசும் நீங்கள் ஏன் என்.ஐ.ஏ.விடம் வழக்கை கொடுத்தீர்கள்?. வெடித்த சிலிண்டரை ஏன் காண்பிக்க மாட்டேன் என்கிறீர்கள்? இதை வாக்காக பார்த்தால் ஆபத்து.
காவல் துறை வெளிப்படையாக இருக்க வேண்டும். சிலிண்டரின் விவரம் வெளியிட வேண்டும்? அமைச்சர் அன்று ஏன் வரவில்லை. ஐந்து நாள் கழித்து வந்து பேச என்னக்காரணம். ஜமாத் தலைவர்கள் கருத்து தெரிவித்தது வரவேற்புக்குரியது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எங்கேயும் காதல்: மனநல காப்பகத்தில் பூத்த காதல்; நோயாளியாய் வந்தவர்கள் நாளை இணையர்களாக!