கோயம்புத்தூர்: மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழையால், பொள்ளாச்சி அருகே உள்ள 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் 117.5 அடியை எட்டியதால், அணையின் பாதுகாப்பு கருதி அணையின் 11 மதகுகள் வழியாக வினாடிக்கு 2,750 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் ஆழியார் ஆற்றங்கரை, ஆனைமலை, அம்பராம்பாளையம் போன்ற பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் ஆற்றில் யாரும் குளிக்கவே, துணி துவைக்கவோ கூடாது எனவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காவிரி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை