கோவை மாவட்டம் வால்பாறையில் கரோனா தடுப்பு முன்னெரிக்கை நடவடிக்கையில் நகராட்சிக்கு உதவிட தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அப்போது, 20 தன்னார்வலர்கள் நகராட்சி ஆணையர் பவன்ராஜை சந்தித்து, தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸ் குறித்து, தடுப்பு நடவடிக்கைக்கு தாங்கள் கலந்துகொண்டு உதவிட விரும்புவதாக கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நகராட்சி ஆணையர், அவர்கள் செயல்படும் விதம், தேயிலை தோட்டப் பகுதிகளில் தொழிலாளர்களிடம் கரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அந்தந்தப் பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நகராட்சி பணியாளர்களுடன் இணைந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டும். மேலும், யாரேனும் கரோனா அறிகுறிகளுடன் உள்ளனரா என்று கண்டறிந்து, தகவல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து, தன்னார்வலர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன் பின்னர், ஆணையர் பவன்ராஜ், அம்மா உணவகத்தை திடீரென பார்வையிட்டு, மதிய உணவை அங்கு சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா: 38 பேருக்கு உறுதி; 277 பேர் தொடர் கண்காணிப்பு