ETV Bharat / state

வைரல் போஸ்டர் - தமிழ்நாட்டில் பிரதமரின் சதுரங்க வேட்டை ஆரம்பம்! - தமிழ்நாடு

கோவை மாநகரில், தலைவரின் சதுரங்க ஆட்டம் என்ற வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

வைரல் போஸ்டர்
வைரல் போஸ்டர்
author img

By

Published : Aug 2, 2022, 6:15 AM IST

கோவை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியை முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

அப்போது சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் பிரதமரை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ்,பேனர்கள் மற்றும் போஸ்டர்களின் புகைப்படங்கள் இணையவாசிகளால் அதிக அளவில் பகிரப்பட்டது.

குறிப்பாக பாஜக கல்வி அணி சார்பில் பிரதமரை வரவேற்க ஒட்டப்பட்ட போஸ்டர் வலைதளங்களில் ட்ரெண்டானது. இந்த நிலையில் கோவை மாநகரில் உக்கடம், டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடி செஸ் விளையாடுவது போன்ற புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

போஸ்டர்களில் தமிழ்நாட்டில் தலைவரின் ஆட்டம் ஆரம்பம் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டரின் புகைப்படங்களை தற்போது நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: சமூக வலைதளங்களில் புரொஃபைல் போட்டோவாக தேசியக்கொடியை வையுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.