கோவை: பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நாயக்கன்பாளையம் ஊராட்சியில் திமுக ஊராட்சி மன்ற தலைவர் கன்னிமுத்து, இவர் ஆனைமலை வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
இவர் ஊராட்சிக்கு மழை நீர் வடிகால் அமைப்பதற்காக டெண்டர் விட்டார். கடந்த சில நாட்களாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஆனால் மழையை பொருட்படுத்தாமல் மழை நீருடன் கான்கிரீட் கலவைகளை கொட்டி வருவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த செயலை அங்கு உள்ள பொதுமக்கள் வீடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 75ஆவது சுதந்திர தினம்: கோவை மண்ணின் விடுதலைப் போராட்ட தடங்கள்