ETV Bharat / state

வேட்டைக்காரன் புதூர் பிரதான கால்வாயை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்! - today Coimbatore news

கோவை பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வேட்டைக்காரன் புதூர் பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

வேட்டைக்காரன் புதூர் பிரதான கால்வாயை சீரமைக்கும் பணிகள் தொடக்கம்!

author img

By

Published : Feb 10, 2023, 9:57 AM IST

காளியாபுரத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் அளித்த பேட்டி

கோயம்புத்தூர்: பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்டத்தில் புதிய, பழைய ஆயக்கட்டுகள் என இரு பிரிவாக பிரிக்கப்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் புதிய ஆயக்கட்டில் ஆழியார் அணையில் இருந்து தொடங்கும் வேட்டைக்காரன்புதூர் கால்வாய் 40 கிலோமீட்டர் தூரம் கொண்டது.

இந்த கால்வாய் மூலம் நீரைப் பெற்று சுமார் 12,000 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. அணையில் இருந்து சுமார் 17வது கிலோ மீட்டர் தூரத்தில் பிரதான கால்வாயில் எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டது. பிரதான கால்வாயின் இரு புறங்களிலும் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 80 கன அடி தண்ணீர் இருபுறம் உள்ள தோப்புகளில் வீணாகச் சென்றது.

பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொதுப்பணி துறையினர், உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது குறித்து காளியாபுரத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் கூறுகையில், “வேட்டைக்காரன் புதூர் கால்வாயில் தற்போது பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தண்ணீர் வருகிற மார்ச் மாதம் வரை வழங்கப்பட வேண்டும். ஆனால், அதற்குள் கால்வாயில் திடீரென எதிர்பாராத விதமாக உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை பொதுப்பணித்துறையினர் விரைந்து சீரமைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு முழுமையாக தண்ணீர் கிடைக்கும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி சாக்கடை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்கள்… என்ன நடவடிக்கை?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.