கரோனா வைரஸ் காரணமாக நான்காம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் பொதுமக்கள் பயணிக்க இ-பாஸ் முறையை பயன்படுத்தலாம் என அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் வாகன ஓட்டிகள் பயணிப்பதாக புகார் எழுந்த நிலையில், கோவை - திருப்பூர் மாவட்ட எல்லையான காரணம்பேட்டை பகுதியில் திருப்பூர் மாவட்ட காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
இதில், இ-பாஸ் இல்லாமல் கோவை மாவட்டத்தில் இருந்து வந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் திருப்பூர் மாவட்டத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, மீண்டும் கோவை மாவட்டத்திற்கே திருப்பி அனுப்பப்பட்டது. இச்சோதனை காரணமாக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மேலும், வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதினால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர்.
இதையும் படிங்க:திருப்பூரில் போதை மிட்டாய்கள் பறிமுதல் - 3 பேர் கைது