கோவை மாவட்டம் பன்னிமடை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர் அண்மையில் வாங்கிய நிலத்திற்கு, தனது தாயார் பெயரில் பெயர் மாறுதல் செய்ய அப்பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், பட்டா பெயர் மாறுதலுக்கு கையெழுத்திட 7 ஆயிரம் ரூபாய் கையூட்டு கேட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து கார்த்திக் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் அறிவுரைப்படி கார்த்திக் பன்னிமடை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், ரசாயனம் தடவிய 7 ஆயிரம் ரூபாய் பணத்தை ஓய்வுபெற்ற உதவியாளர் பழனிசாமி மூலம் கொடுத்துள்ளார்.
அப்போது கையூட்டு வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சிவக்குமார், ஓய்வுபெற்ற உதவியாளர் பழனிசாமி ஆகியோரை லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கைதுசெய்தனர்.
இதையும் படிங்க: விருதுநகரில் ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது