கோயம்புத்தூர் தெற்குத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், இன்று (ஏப். 3) உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோயில் பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் நடந்து சென்று வாக்கு சேகரித்தார்.
சுமார் 2 கி.மீ., தூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்த அவர், சிறிது நேரம் மக்களிடையே உரையாடிவிட்டு, மீண்டும் நடந்து சென்று வாக்கு சேகரித்தார். இதில், சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தனர்.
அப்போது, வானதி சீனிவாசனுக்கு மலர்த் தூவி வரவேற்பளிக்கப்பட்டது. குறுகிய சந்துகளிலும் அவர் நடந்து சென்று வாக்கு சேகரித்தது அப்பகுதி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: 'துக்கடா அரசியவாதி' என விமர்சனம் - மநீம பதில் அளிக்குமாறு வீடியோ வெளியிட்ட வானதி சீனிவாசன்