ETV Bharat / state

SG Surya Arrest: ஸ்டாலின் அறிவுரையை அவருக்கே திருப்பி சொன்ன வானதி! எஸ்.ஜி.சூர்யா கைதுக்கு கண்டனம் - முதலமைச்சர் மு க ஸ்டாலின்

பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதை அடுத்து, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

vanathi srinivasan press release
வானதி சீனிவாசன்
author img

By

Published : Jun 17, 2023, 1:15 PM IST

கோவை: பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஜக மாநிலச் செயலாளர் தம்பி எஸ்.ஜி.சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஊழல் வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விசாரணை நடத்திய அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்த பிறகு, திமுக அரசு, என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவுக்கு பதற்றத்தில் உள்ளது.

1972-ம் ஆண்டில் எம்ஜிஆர் அவர்கள் அதிமுகவை தொடங்கியபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்த திமுக இப்படிதான் கோரத்தாண்டவம் ஆடியது. ஆனால், கடைசியில் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருந்த வரையிலும் முதலமைச்சர் பதவி பற்றி திமுகவினரால் கனவு கூட காண முடியவில்லை.

இதையும் படிங்க: பாஜக மாநிலச்செயலாளர் அர்த்த ராத்திரியில் கைது; அண்ணாமலை கண்டனம்!

திமுகவினர் எப்போதுமே ஜனநாயகம், பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை பற்றி எல்லாம் வகுப்பெடுப்பார்கள்ஆனால், எல்லாம் மற்றவர்களுக்குதான். அதிகாரம் கைக்கு வந்தால் திமுகவினர் சர்வாதிகாரிகளாக மாறி விடுவார்கள். அதுதான் இப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. திமுக மற்றும் அதன் சர்வாதிகார செயல்பாடுகளை ஜனநாயக முறையில் விமர்சித்ததற்காக தம்பி எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டிருக்கிறார். எந்தவொரு அடக்குமுறைக்கும் பாஜக தொண்டர்கள் அஞ்ச மாட்டார்கள்.

இரு வாரங்களுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட சிலரது டிவிட்டர் கணக்குகளை அந்நிறுவனம் முடக்கிய போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், "கருத்துகளை கருத்துகளால் எதிர்கொள்வதே அறம். கழுத்தை நெறிப்பது அல்ல" என்றார். இதையே அவருக்கு மீண்டும் நினைவுப்படுத்த விரும்புகிறேன் என வானதி சீனிவாசன் தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செந்தில் பாலாஜி கைது மற்றும், அதற்கு முதலமைச்சர் வெளியிட்டுள்ள வீடியோவை விமர்சித்துள்ள வானதி, அதிமுகவில் இருக்கும் போது ஊழல்வாதி என செந்தில் பாலாஜி விமர்சிக்கப்பட்ட நிலையில், திமுக வந்தவுடன் அதே நபர் புனிதர் ஆகிவிட்டாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக மாநில துணைத்தலைவரான எஸ்.ஜி.சூர்யா தமது ட்விட்டர் பதிவுக்காக கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையில் மலக்குழியில் இறங்கி சுத்தம் செய்த தொழிலாளர் உயிரிழந்த வழக்கில், மாநகராட்சி கம்யூனிஸ்ட் கவுன்சிலருக்கு தொடர்பிருப்பதாக தமது ட்விட்டர் பதிவில் அவர் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோரையும் தமது பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் சென்னையில் கைது செய்யப்பட்ட எஸ்.ஜி.சூர்யா, மதுரை அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: செந்தில் பாலாஜி மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை முதல்வருக்கு வைத்த செக் மேட் - திருமாவளவன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.