ETV Bharat / state

"உதயநிதிக்கு நாவடக்கம் இல்லை என்றால் எதிர்மறை தலைவராக வலம் வருவார்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிவுரை - கோவை செய்திகள்

Tamilisai Soundararajan: உதயநிதி ஸ்டாலின் வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியலும், மற்ற இடங்களிலும் வலம் வருவார் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 8:21 PM IST

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

கோவை: எட்டிமடை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி நிகழ்வில் கலந்து கொண்ட தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”சென்னையில் மழை பாதிப்பு ஏற்பட்டது போல் இல்லாமல், கோவையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்கள் தாக்கப்பட்ட விவகாரம் மன வருத்தம் அளிக்கிறது. ரத்தம் சிந்தி உள்ளது.
அதனால் வைகுண்ட ஏகாதேசி நேரத்தில் ஸ்ரீரங்கம் கோயில் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கொள்ள முடியாத ஒன்று. இது இந்து மதத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் இன்னும் அதிகமாக கண்காணிப்பு தேவை. உண்டியலை எடுக்க குறியாக இருப்பதில் காட்டும் அக்கறை பாதுகாப்பிலும் இருக்க வேண்டும். காஷ்மீர் முழுவதுமாக நம்மோடு இணைந்து இருக்கும் வகையில் தீர்ப்பு வந்திருக்கிறது.

பெரியாரின் கருத்துகள் மதிக்கக் கூடியது, ஆனால் அவர் இனத்தின் விடுதலையை மாநிலத்தோடு ஒப்பிடுவதை ஏற்கமாட்டார். பெரியாரின் கருத்துகளை அழுத்தமாக பதிவு செய்வோம் என முதலமைச்சர் தெரிவிக்கின்றார்.
ஆனால் பெண்களுக்கு உரிமை கொடுக்கும் ஆட்சி தான் மத்தியில் உள்ளது. காஷ்மீர், கவர்னர், கட்சி தீவு என மத்தியில் ஆட்சியில் இருந்த போது செய்யாத விஷயங்களை இப்போது திமுக பேசிக் கொண்டிருக்கிறது.

கவர்னர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் என்பது ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகும். கருத்தை கருத்தால் எதிர் கொள்ள வேண்டும், கேரள கவர்னர் மீது நடந்த தாக்குதல் முயற்சி வன்மையாக கண்டிக்கதக்கது. மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவது குறித்து அமைச்சர் உதயநிதி பேசியது குறித்து கேட்டதற்கு, கலைஞர் உரிமைத் தொகை என்பது கலைஞரா கொடுக்கின்றார் எனவும் கேள்வி எழுப்பினார்.

வார்த்தைகளை அடக்கவில்லை என்றால் உதயநிதி ஸ்டாலின் எதிர்மறை தலைவராக இந்தியா கூட்டணியலும், மற்ற இடங்களிலும் வலம் வருவார். கலைஞரின் பேரனா நீங்க? அவர் இப்படியா பேசினார்? திட்டுவதாக இருந்தாலும் அழகு தமிழல் திட்டுவார். திமுக யாரோட அப்பன் வீட்டு சொத்து எனவும் கேள்வி எழுப்பினார்.
திமுக தொண்டர்கள் முதலில் இதை உதயநிதியிடம் கேள்வி கேட்க வேண்டும், அதற்கு அவரே வழி செய்வதாக” தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொள்ளாச்சியில் 6.50 கிலோ கஞ்சா பறிமுதல் - 3 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.