ETV Bharat / state

இரண்டு வார்டு; ஒரு வாக்குச்சாவடி - கால தாமதத்தால் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள்! - கோவை மாவட்டச் செய்திகள்

கோவை: கணியூர் ஊராட்சியில் இரண்டு வார்டுகளுக்கு ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதால் கால தாமதம் ஏற்பட்டு பல வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினர்.

local body election
local body election
author img

By

Published : Dec 30, 2019, 10:45 PM IST

கோவை மாவட்டம், சூலூர் ஒன்றியத்திற்குட்பட்ட கணியூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையத்தில் 11, 12 ஆகிய இரண்டு வார்டுகளுக்கும் ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதால் வாக்காளர்கள் வாக்களிப்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தும், பலர் வாக்களிக்காமல் வரிசையில் நின்றநிலையிலேயே இருந்தனர்.

கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்தவர்கள் கூட நீண்ட வரிசைகளைக் கண்டு திரும்பிச் சென்றனர். அதுமட்டுமல்லாமல் வாக்குப் பெட்டியை சரியாக மூடமுடியாமல் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அலுவலர்கள் திணறினர். இரண்டு வார்டுகளுக்கு ஒரு வாக்குச்சாவடி அமைத்ததால், டோக்கன் வழங்கப்பட்டும் வாக்களிக்க முடியவில்லை என வாக்காளர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

வாக்குச்சாவடி

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல் பதவிப் போட்டி: ஒட்டப்பிடாரத்தில் ஒருவர் வெட்டிக்கொலை 3 பேர் படுகாயம்!

Intro:சூலூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கணியூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் பகுதியில் இரண்டு வார்டுகளையும் சேர்த்து ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதால் கால தாமதம் ஏற்பட்டதால் பலர் வாக்களிக்க முடியாமல் வீடு திரும்பினர்

Body:இரண்டாவது கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்றது கோவை மாவட்டத்தில் சூலூர் சுல்தான்பேட்டை உள்ளிட்ட ஏழு ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றது சூலூர் ஊராட்சி ஒன்றியம் கணியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊஞ்சப்பாளையம் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது அங்கு 11 மற்றும் 12 வார்டுகளுக்கு ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது ஆள் பற்றாக்குறை காரணமாக இரண்டு வார்டுகளுக்கும் சேர்ந்து ஒரே வாக்குச்சாவடி அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது இதனால் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களிக்க நேரிட்டது இதனால் வாக்காளர்கள் சிரமத்திற்கு உள்ளாகினர் மாலை 5 மணியுடன் வாக்கு பதிவு நிறைவடைந்த நிலையில் கடைசி நேரத்தில் வாக்களிக்க வந்தவர்கள் கூட்ட நெரிசலை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர் முன்னதாக வந்த 100 க்கும் மேற்பட்டோருக்கு டோக்கன் வழங்கப்பட்டது சுமார் 2 மணி நேரம் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்தனர் இதனிடையே வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்கு பெட்டிக்கு சீல் வைக்கும் பணி துவங்கியது அப்போது வாக்கு பெட்டி சரியாக மூடாததால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அந்த பெட்டிக்கு சீல் வைக்க முடியாமல் அதிகாரிகள் திணறினர் இதனையடுத்து வேட்பாளர்களின் முகவர்கள் உடன் ஆலோசனை மேற்கொண்டு பின்னர் வேறு ஒரு பெட்டிக்கு வாக்குச்சீட்டுகள் அனைத்தும் மாற்றப்பட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு வாக்கு பெட்டிக்கு சீல் வைக்கப்பட்டது இதனை அடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையமான சூலூர் அரசு மேல்நிலைப்பள்ளி கொண்டு செல்லப்பட்டது...

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.