ETV Bharat / state

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற சம்பவத்தில் இருவர் கைது!

கோவையில் காரில் வந்து பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற சம்பவத்தில் ஸ்விக்கி ஊழியர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற சம்பவத்தில் இருவர் கைது!
காரில் வந்து செயின் பறிக்க முயன்ற சம்பவத்தில் இருவர் கைது!
author img

By

Published : May 16, 2023, 4:28 PM IST

காரில் வந்து செயின் பறிக்க முயன்ற சம்பவத்தில் இருவர் கைது

கோவை: பீளமேடு ஹட்கோ காலனி பகுதியைச் சேர்ந்தவர், ராஜ்குமார். இவரது மனைவி கவுசல்யா (வயது 38). இவர் தனது கணவருடன் நாள்தோறும் காலை நேரத்தில் அந்தப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்த நிலையில் பணி காரணமாக ராஜ்குமார் நேற்று முன் தினம் காலை நடைபயிற்சிக்கு வராததால், கவுசல்யா மட்டும் தனியாக நடைப்பயிற்சி மேற்கொண்டார்.

அப்போது அவர் ஜி.வி. ரெசிடென்சியில் உள்ள பேக்கரி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வெள்ளை நிற காரில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பின்தொடந்து வந்து உள்ளனர். அப்போது காரினுள் இருந்த ஒருவர் காரின் முன் பக்க ஜன்னலைத் திறந்து, அதன் வழியாக கையை வெளியே நீட்டி தனியாக நடந்து சென்று கொண்டிருந்த கவுசல்யா கழுத்தில் இருந்த நகையைப் பறிக்க முயன்று உள்ளார்.

கண் இமைக்கும் நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் கவுசல்யா அதிர்ச்சி அடைந்துள்ளார். இருப்பினும் தனது இரு கைகளாலும் நகையை இறுக்க பற்றிக் கொண்டார். மேலும் அவர் ”திருடன் திருடன்” என்று கூச்சலிட்டு உள்ளார். அந்த நபர் நகையைப் பறிக்க முயன்ற போது கவுசல்யா நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதை அடுத்து காரில் வந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இந்த சம்பவத்தினால் அதிர்ச்சி அடைந்த கவுசல்யா, இந்த சம்பவம் குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். அவர் அளித்தப் புகாரின் பேரில் சிங்காநல்லூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடைய நகைப் பறிப்பு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அதில் கவுசல்யா நடைப்பயிற்சி செய்தபோது, பின்னால் வாகனப் பதிவெண் இல்லாத காரில் வரும் அடையாளம் தெரியாத நபர்கள் செயினை பறிக்கும்போது காரின் கீழ் கவுசல்யா விழும் காட்சிகள் இடம்பெற்று இருந்தது. இந்த சம்வத்தைத் தீவிரமாக விசாரணை நடத்திய போலீசார் இன்று இரண்டு பேரை கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் நகை பறிக்க முயன்ற அபிஷேக் குமார் மற்றும் சக்திவேல் ஆகிய இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை மாநகர தெற்கு காவல் துணை ஆணையாளர் சண்முகம் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் கவுசல்யா கழுத்தில் இருந்த செயினைப் பறிக்க முயற்சி செய்தது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் இன்று காலை விமான நிலையம் பின்புறம் இருந்த அபிஷேக் குமார், சக்திவேல் ஆகியோரை மடக்கிப் பிடித்து கைது செய்யப்பட்டு புலன் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த அபிஷேக் ஸ்விக்கி ஊழியராக பணியாற்றுபவர். கடந்த 20 ஆண்டுகளாக கோவையில் வசித்து வருகிறார். இவரும் தர்மபுரியைச் சேர்ந்த சக்திவேலும், தனது காரில் திட்டமிட்டு வாகனப் பதிவெண்களை அகற்றிவிட்டு நகை பறிப்பில் ஈடுபட முயன்றுள்ளனர்.

அபிஷேக் குமார் மீது ஏற்கனவே நகைப் பறிப்பு வழக்குகள் உள்ளன. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த கார் சென்ற பகுதிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளோம். நகைப்பறிப்பு சம்பவங்களைத் தடுக்க ரோந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பைக்கில் வந்து நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபடுவது குறைந்துள்ளது. இந்த வழக்கில் சிசிடிவி கேமரா காட்சிகளே குற்றவாளிகளைப் பிடிக்க முக்கியப் பங்காற்றியது. முக்கிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்த பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: காரில் வந்து செயின் பறிப்பு முயற்சி! பதைபதைக்கும் சிசிடிவி காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.