கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட பெத்திக்குட்டை வனப்பகுதியிலிருந்து இரண்டு ஆண் காட்டு யானைகள் நேற்று மாலை வெளியே வந்தன. அந்த யானைகள் இன்று (ஏப்.16) காலை சாலையூர் பகுதி வழியாக மங்காபாளையம் என்ற கிராமத்திற்குள் நுழைந்து கருப்புசாமி என்பவரது தோட்டத்திற்குள் சென்று கட்டப்பட்டிருந்த பசுமாட்டினை தாக்கியதில் மாட்டின் குடல் வெளியே வந்தது.
இதையடுத்து அருகே உள்ள கூலே கவுண்டம்பாளையம் பகுதிக்குள் சென்ற யானைகள் வெங்கிடுசாமி என்பவரின் மாட்டினை தாக்கியதில் மாடு படுகாயமடைந்தது. பின்னர், அப்பகுதி மக்கள் விரட்டியதால் இரண்டு காட்டு யானைகளும் இடுகம்பாளையம் பகுதிக்கு சென்று அங்கு ஆஞ்சநேயர் கோயில் கரடு பகுதியில் உள்ள பள்ளத்தில் இரண்டு யானைகளும் முகாமிட்டுள்ளன.
பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, மேட்டுப்பாளையம் வனத்துறையினர் 50க்கும் மேற்பட்டோர் யானைகளை கண்காணித்து வருகின்றனர். பகல் நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதால் யானைகளை இரவு நேரத்தில் வனப்பகுதிக்கு விரட்ட வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: