கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோமனூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் நடத்திவரும் கடைகளில் புகையிலை, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்றவை விற்பனை செய்யப்படுவதாக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததுள்ளது.
இதையடுத்து கருமத்தம்பட்டி காவல் நிலைய காவலர்கள் சோமனூர் பகுதிகளில் தீவிர சோதனையை மேற்கொண்டனர். சோதனையில் அங்கிருந்த ராம்தேவ் ஏஜென்சி, பவானி ஏஜென்சி ஆகிய இடங்களில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து குப்பா ராவ், சிகால் லால் என்ற இருவரிடம் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் கோவை மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து குட்கா பொருட்களை எடுத்து வந்து, அதிக விலைக்கு விறபனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களைக் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து ஐம்பதாயிரம் மதிப்புள்ள குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க:சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 3 பேர் கைது