கோவை குனியமுத்தூர் அருகே போதை பொருள் விற்பனை செய்யப்படுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குற்றப்பிரிவு காவல் துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 2 பேரைப் பிடித்து விசாரணை நடத்தினார்.
அதில், அவர்கள் 2 பேரும் போதை பொருளை தங்களது சட்டைப் பையில் மறைத்து வைத்திருந்ததும், அதை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து 1.5 கிலோ போதை பொருட்களை பறிமுதல் செய்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடந்த சில நாட்களாக கோவையைச் சுற்றியுள்ள பல இடங்களிலும் கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் துணை, ஆணையர் பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு அனைத்து காவல் எல்லைகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: சோளிங்கரில் குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு