ETV Bharat / state

ஒரு தேர்தலில் தோற்றவுடன் அழிந்துபோகமாட்டேன்; டிடிவி தினகரன்!

கோயம்புத்தூர் : ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றதிற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அழிந்துவிடும் என எண்ண வேண்டாம், இன்னும் பல தேர்தல்களை எதிர்கொள்ளும் பலம் உள்ளது என டிடிவி தினகரன் கூறினார்.

அமமுக கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய தினகரன்
author img

By

Published : Sep 30, 2019, 7:59 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம், கணியூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு என தெரிவித்தார். நாடாளுமன்ற இடைத்தேர்தல் தோல்வி என்பது நல்ல அனுபவம் எனவும் தேர்தல் தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார்.

மேலும், ஒரு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தோற்றதிற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அழிந்துவிடும் என நினைப்பது பகல் கனவு எனவும் இன்னும் ஐந்து தேர்தல்களை சந்திக்கும் வலிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுயநலத்திற்காக சிலர் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர் எனவும் சிலர் கட்சியிலிருந்து வெளியேறியதால் கட்சி பலவீனம் அடைந்து விடவில்லை எனவும் அவர் கூறினார்.

அமமுக கட்சி ஆலோசனை கூட்டத்தில் பேசிய தினகரன்

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக மக்கள் உள்ளனர் எனவும் வரும் தேர்தலில் மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் எனவும் கூறினார். அதற்காக அமமுக-வினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார். தன்னை அரசியலில் அறிமுகப்படுத்தியது மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா என்றார். மேலும், நான் எனது தொண்டர்கள், கடவுளைத் தவிர வேறு யாருக்கும் பயப்பட மாட்டேன் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : 'வருங்காலத்தில் அமமுகதான் மிகப்பெரிய கட்சியாக விளங்கும்' - விடாப்பிடியாக இருக்கும் டிடிவி தினகரன்!

Intro:ஒரு நாள் அவன் மன்ற தேர்தலில் தோற்று அதற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அழிந்துவிடும் என நினைப்பது பகல் கனவு என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்

Body:கோவை மாவட்டம் கணியூர் பகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்போது பேசிய அவர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிப்பதே இலக்கு என தெரிவித்தார் நாடாளுமன்றம் மற்றும் இடைத்தேர்தல் தோல்வி என்பது நல்ல அனுபவம் எனவும் தேர்தல் தோல்விக்கான முழு பொறுப்பையும் நானே ஏற்றுக் கொள்கிறேன் எனவும் அவர் கூறினார் மேலும் ஒரு நாடாளுமன்றத் தேர்தலில் தோற்றதிற்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அழிந்துவிடும் என நினைப்பது பகல் கனவு எனவும் இன்னும் ஐந்து தேர்தல்களை சந்திக்கும் வலிமை இருப்பதாகவும் அவர் தெரிவித்தார் சுயநலத்திற்காக சிலர் கட்சியில் இருந்து வெளியேறுகின்றனர் எனவும் சிலர் கட்சியிலிருந்து வெளியேறியதால் கட்சி பலவீனம் அடைந்து விடவில்லை எனவும் அவர் கூறினார் மக்கள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவாக உள்ளனர் எனவும் வரும் தேர்தலில் மக்கள் ஆட்சியில் அமர்த்துவார்கள் எனவும் கூறினார் அதற்காக அம்முகவினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றார் தன்னை அரசியல் அறிமுகப்படுத்தியது ஜெயலலிதா எனவும் தொண்டர்கள் கடவுளை தவிர வேறு யாருக்கும் பயப்பட மாட்டேன் எனவும் அவர் தெரிவித்தார்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.