ETV Bharat / state

யானைகளை துன்புறுத்தும் பழங்குடியின இளைஞர்கள் - அதிர்ச்சி வீடியோ - thirumurthi malai elephant

கோவை: வனப்பகுதியில் சுற்றித்திரியும் யானைகளை, பழங்குடியின இளைஞர்கள் கற்களை வீசி, நாய்களை கொண்டு விரட்டியடிக்கும் காணொலி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

tribal-youngsters
பழங்குடியின இளைஞர்கள்
author img

By

Published : May 6, 2021, 11:33 AM IST

திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமணலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலை சுற்றி ஏராளமான பழங்குடியின கிராமங்கள் உள்ளன.

இங்கு வசிக்கும் இளைஞர்கள், அப்பகுதி அருகே சுற்றும் காட்டு யானைகளை கல்லால் அடிப்பது, நாய்களை கொண்டு விரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.

யானைகளை துன்புறுத்தும் பழங்குடியின இளைஞர்கள்

இந்நிலையில், குட்டியுடன் வரக்கூடிய யானைகளை பெரிய கற்களை கொண்டு இளைஞர்கள் விரட்டியடிக்கும் காணொலி சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உடுமலை வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், இத்தகைய செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.